• Breaking News

    கும்மிடிப்பூண்டி வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்

     


    சென்னை மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை துவக்க விழா குமமிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் வரவேற்றார்.நிகழ்வில் பேரூராட்சி துணை தலைவர் கேசவன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அப்துல்கறீம், கருணாகரன், நஸ்ரத் இஸ்மாயில், விமலா அர்ச்சுனன் காளிதாஸ், திமுக ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட நிர்வாகி எஸ்.ரமேஷ், பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து விழாவில் கோட்ட பொது மேலாளர் கே.மோகன்,  பணி மனை கிளை மேலாளர் ஜெகதீசன், தொமுச நடத்துனர் செயலாளர் சு.சுரேஷ்பாபு, தொமுச நடத்துனர் பொதுக்குழு உறுப்பினர் கே.ஜெய்சங்கர், பேருந்து ஓட்டுனர் சரவணன், நடத்துனர் ஆனந்தன் பங்கேற்ற நிலையில், அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் சால்வை அணிவித்து, பரிசுகளை வழங்கினர்.

    இதனை தொடர்ந்து பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டியில் இதுவரை 4 புதிய பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக துவக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் கோரிக்கையாக செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட பேருந்துகளான ஆரம்பாக்கம்-திருவள்ளூர் செல்லும் தடம் எண் 173, செங்குன்றத்தில் இருந்து தேர்வாய் செல்லும் தடம் எண் 113 ஆகிய பேருந்துகளை மீண்டும் இயக்க கேட்டுக் கொண்டார்.

    இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்ததோடு, பேருந்தில் பயணமும் செய்தார்.

    No comments