காரணைப்புதுச்சேரியில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் தீவிர முயற்சியால் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த ஒன்றரை கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை


கூடுவாஞ்சேரி, காரணைப்புதுச்சேரியில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் தீவிர முயற்சியால் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த ஒன்றரை கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய உட்பட்ட ஊரப்பாக்கம் அடுத்த காரனைப்புதுச்சேரி ஊராட்சியில், காரனைப்புதுச்சேரி, காட்டூர், அண்ணா நகர், பெரியார் நகர், கோகுலம் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட காரனைப்புதுச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி தரக்கோரி தமிழக முதல்வர், அமைச்சர், எம் பி, எம்எல்ஏ மற்றும் பெரியார் நகர் ஏரிக்கரை எதிரே உள்ள பர்பெட்டிவான்மேளா நிறுவனத்திற்கு திமுக ஊராட்சி மன்ற தலைவர் நளினிஜெகன் கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு-குரு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன, வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் லோகநாதன், ஆப்பூர் சந்தானம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஏவிஎம் இளங்கோவன் ஆகியோர் பரிந்துரையின் பேரிலும்,  பர்பெட்டிவான்மேளா நிறுவனத்தின் சார்பில் சிஎஸ்ஆர் நிதி உதவியின்கீழ் ஒன்றரை கோடி நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை போடப்பட்டு அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நளினி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கன்னியப்பன், ஊராட்சி மன்ற துணை தலைவர் வினோதினிஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளர்களாக காரணைப்புதுச்சேரி திமுக ஊராட்சி மன்ற தலைவர் நளினிஜெகன், பர்பெட்டிமேளா நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மோகன்பாபு, மோனிகா ஆகியோர் கலந்துகொண்டு உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடுபட்டு அடிக்கல்நாட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் தலா 3 வகுப்பறைகள், ஆடிட்டோரியம், 5 அறிவியல் ஆய்வகம், கழிவறைகள் மற்றும் கூட்டரங்கு ஆகியவற்றை கட்டுவதற்கு பணிகளை தொடங்கி வைத்தார். 

இதில் ஒன்றிய கவுன்சிலர் மோகனாகண்ணன், வார்டு உறுப்பினர்கள் பழனி, ராஜேந்திரபிரசாத், திவ்யாதீபன், பாணுவிநாயகம், லல்லிலோகநாதன், செந்தில், சரஸ்வதிதனசேகர், சாரதாகாசி உட்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், திமுக கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments