ராஜ்யசபா நிலைக்குழு தலைவராக தம்பிதுரை நியமனம்
ராஜ்யசபாவின் அரசு உத்தரவாதங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராக, அ.தி.மு.க.,வின் தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.ராஜய்சபாவின் சில நிலைக்குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களை நியமித்து, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்யசபா வெளியிட்ட செய்தி:
ராஜ்யசபாவின் துணை சட்டங்கள் நிலைக்குழுவின் தலைவராக, சிவசேனாவின் மிலிந்த் தியோரா மியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலைக்குழுவின் உறுப்பினர்களாக, அ.தி.மு.க.,வின் சி.வி. சண்முகம், தி.மு.க.,வின் திருச்சி சிவா, தமிழ் மாநில காங்கிரசின் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு உத்தரவாதங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராக, அ.தி.மு.க.,வின் தம்பிதுரை, மனுக்கள் நிலைக்குழுவின் தலைவராக, ஆம் ஆத்மியின் நாராயண் தாஸ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபையில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் நிலைக்குழுவின் தலைவராக, பா.ஜ.,வின் லட்சுமிகாந்த் பாஜ்பாயி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் உறுப்பினராக, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments