• Breaking News

    தல ரசிகன் தளபதி தொண்டன்..... மாநாடு பேனரில் ருசீகரம்

     


    விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதனால் கட்சி நிர்வாகிகளும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் மாநாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கட்சி சார்பிலும் காவல்துறை சார்பிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாடு திடலில் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

    சினிமாவில் அஜித் விஜய் ரசிகர்கள் மோதி  கொண்டாலும் அவர்களுக்கிடையே நல்ல நட்புதான் இருக்கிறது. விஜய் அரசியல் பயணத்திற்கு அஜித் சமீபத்தில் வாழ்த்து சொன்னதாக தெரிகிறது. இந்த நிலையில் மாநாடு நடக்கும் பகுதியில் அஜித் ரசிகர்கள் விஜய்யும் அஜித்தும் அருகே நிற்பது போல தல ரசிகன் தளபதி தொண்டன் என பேனர் வைத்துள்ளனர். மேலும் அனைவரும் திரண்டு வாரீர் என போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

    No comments