சபரிமலையில் தரிசன நேரத்தை மாற்றியமைத்தது தேவசம் போர்டு
சபரிமலையில் 17 மணி நேரம் தரிசனம் செய்யும் வகையில், தரிசன நேரத்தை மாற்றியமைத்து தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நவம்பர் 16ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிஎஸ் பிரசாந்த் மற்றும் தலைமை அர்ச்சகர்களின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நடப்பு ஆண்டில் பக்தர்களின் தரிசன நேரத்தை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு, அதிகாலை 3 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஐயப்பனை தரிசனம் செய்ய 17 மணி நேரம் கோயில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments