நீலகிரி: நிலச்சரிவில் பரிதாபமாக இறந்த பள்ளி ஆசிரியை

 


நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, குன்னூரில் சோகமான விபத்துக்கு வழிவகுத்தது. குன்னூர் அரசு மருத்துவமனை அருகே நடந்த இந்த மண்சரிவில் தனியார் பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி என்பவர் உயிரிழந்தார். அப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு சத்தம் கேட்டு ஜெயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்த போது, மண் சரிவில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெயலட்சுமி அலறல் சத்தம் கேட்டு வந்த அவருடைய கணவர் ரவி, மகள்கள் வர்ஷா மற்றும் வையூ ஆகியோரும் மண்சரிவில் சிக்கி கொண்டனர். அவர்களை  தீயணைப்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் உயிருடன் மீட்டனர். தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஜெயலட்சுமியின் உடலை மீட்டனர்.

இந்த துயரச் சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments