திருச்சியில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி குமுளி ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
பெட்டவாய்த்தலை காவல் நிலைய சரகத்தில் 3 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் கார் ஒன்று சென்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சோதனை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை ரவுடி குமுளி ராஜ்குமார் மற்றும் அவரது ஆதராவாளர்கள் மிரட்டிவிட்டு சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
0 Comments