• Breaking News

    திருப்பதி லட்டில் கலப்படம் இல்லை..... மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல்

     


    திருப்பதிக்கு வழங்கப்பட்ட நிலையில் கலப்படம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. கலப்படம் இல்லை என்பதற்கான அக்மார்க் சான்று பெற்ற பிறகுதான் திருப்பதி தேவஸ்தான போர்டு ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    சுமார் 12 விதமான சோதனைகளை அக்மார்க் நிறுவனத்தினர் நடத்தியுள்ளனர். அதன் பிறகு ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திற்கு சான்று வழங்கியுள்ளனர்.ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் வழங்கிய நெய்யில் கலப்படம், விலங்கு கொழுப்பு இருந்ததாக வெளியான அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

     திருப்பதி தேவஸ்தான போர்டு ஏ .ஆர் டெய்ரி நிறுவனத்தின் மீது அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு மேற்கண்ட போது திருப்பதிக்கு அனுப்பிய நெய்க்கு சான்றிதழ் வாங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

    No comments