கன்னியாகுமரி: சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் உரிமை நீதிக் கட்சி மனு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர் நிலைகளிலும் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக மாறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சுழல் நிலை உள்ளதால் குப்பைகளை அகற்ற கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில் 19.08.2024 அன்று மக்கள் உரிமை நீதி கட்சி மாவட்ட செயலாளர் அருண்ராஜ் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
ஆனால் இது வரையிலும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7.10.2024 அன்று நடைபெற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மாவட்ட செயலாளர் அருண்ராஜ் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாத குழித்துறை நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் பொது மக்கள் நலன் கருதி குப்பைகளை உடன்டியாக அகற்றக் கோரிக்கை மனு அளித்தார்.
No comments