• Breaking News

    கும்மிடிப்பூண்டி: பெத்திக் குப்பம்த்தில் அதிமுக ஒன்றிய,நகர நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

     

    அதிமுக மாவட்ட நிர்வாகி கும்மிடிப்பூண்டி ஒன்றியகுழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார்,  ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ வும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சிறுனியம் பலராமன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர்கள் ஷியாமளா தன்ராஜ், எஸ்.எம்.ஸ்ரீதர், முல்லைவேந்தன்,  ஆரோன், ஒன்றியகவுன்சிலரும், ஒன்றிய துணை செயலாளருமான ஏ.டி.நாகராஜ், அம்மா பேரவை ஒன்றிய நிர்வாகி ஆரம்பாக்கம் நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணம்பாக்கம் சதீஷ், எஸ்.ஆர்.கண்டிகை சி.எம்.ஆர். ரேணுகா முரளி, பெரியஓபுளாபுரம் செவ்வந்தி மனோஜ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு,  நகர செயலாளர் எஸ்.டி.டி.ரவி வரவேற்றனர்.தொடர்ந்து கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் பேசும் போது, திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிமுக நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றவர், அதிமுக உறுப்பினர் சேர்க்கையில் நிர்வாகிகள் வேகமாக செயல்பட வேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான பொன்னையன் பேசுகையில், திமுகவை பேரறிஞர் அண்ணா துவக்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுகவை ஆட்சி பீடத்தில் ஏற்றியவர் எம்ஜிஆர் என்று அண்ணாவே  எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தது முதல் அவர் உயிருடன் இருந்தவரை திமுக தமிழகத்தில் ஆள முடியவில்லை என்றவர், எம்ஜிஆர் கட்டி  காத்த கட்சியை ஜெயலலிதா உயர்த்திய நிலையில், அதிமுக பொதுசெயலாளர் முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சி காலத்தில் இந்தியாவின் சிறந்த பிரதமராக திகழ்ந்தார் என்றார்.

    தொடர்ந்து பேசியவர் அதிமுகவினர் புதிய உறுப்பினர் சேர்க்கையில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் திருத்தல் புதிய வாக்காளர்களை சேர்த்தல் பணிகளை கவனத்தோடு செய்ய வேண்டும் என்றும் கூறியவர்,  சமூக வலைதளங்களில் அதிமுக நிர்வாகிகளின் பிரச்சாரம் மந்தகதியில் உள்ளதால் தேசியக் கட்சிகளுக்கு நிகராக சமூக வலைதளங்களில் அதிமுகவினர் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றவர், அதிமுகவால் தமிழக அரசை கண்டித்து நடத்தப்பட்டுள்ள மனித சங்கிலி போராட்டம், செயல் வீரர்கள் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் .

    No comments