• Breaking News

    ஓடும் ரயிலில் சாகசம்..... மின் கம்பத்தில் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்

     


    சென்னை ராயபுரத்தில், ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார்.சென்னை மாதவரத்தைச் சேர்ந்த அபிலாஷ், பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் கடந்த 9-ஆம் தேதி கல்லூரி முடிந்து ரயிலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ரயிலில் தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட அபிலாஷ் மின் கம்பத்தில் மோதி, தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரீல்ஸ் மோகத்தால் நேரிட்ட இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments