• Breaking News

    மறைந்த முரசொலி செல்வத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆறுதல்


     மறைந்த முரசொலி செல்வத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 10-ம் தேதி பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் கோபாலபுரத்தில் உள்ள முரசொலி செல்வம் இல்லத்திற்கு நேரில் சென்ற மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் எம் சக்ரவர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

    No comments