பொன்னமராவதி அருகே காரையூரில் ரோஸ் தொண்டு நிறுவனம்,டி.டி.எச் நிறுவனம் இணைந்து ஒன்றிய அளவிலான பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கான கலந்தாய்வு, விழிப்புணர்வு நடத்தினர்


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் ரோஸ் தொண்டு நிறுவனம்,டி.டி.எச் நிறுவனம் இணைந்து வளர் இளம் பெண்கள், ஒன்றிய அளவிலான பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நடத்தினர்.காரையூர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற வளர் இளம் பெண்கள், ஒன்றிய அளவிலான பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கான கலந்தாய்வு விழிப்புணர்வுக்கு நிகழ்விற்கு ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன், மேலத்தானியம் ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன்,காரையூர் ஊராட்சி மன்றத்தலைவர் முகமது இக்பால், கவுன்சிலர் வளர்மதி முருகேசன்,அரசமலை ஊராட்சி மன்றத்தலைவர் பழனிவேல்,ஜீவானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தொண்டு நிறுவன பணியாளர்கள் அகிலா,சமுதாய ஒருங்கிணைப்பாளர் சாத்தனூர் புவனேஸ்வரி ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.பின்னர் தொடங்கிய விழிப்புணர்வில் வளர் இளம் பெண்கள் மன ரீதியாக பாதிப்புகுள்ளாகும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், உடல் பருவ நிலை,உணவு உட்கொள்ளும் வழி முறைகள், வலைத்தள பயன்பாட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி விழிப்புணர்வை வளர் இளம் பெண்களுக்கு திருமயம் வட்டார வளர்சி அலுவலர் கர்ப்புக்கரசி, ஒருங்கிணைப்பாளர்கள் சாத்தனூர் புவனேஸ்வரி, கஸ்தூரி,ரோஸ் நிறுவனத்தின் தையல் பயிற்சி ஆசிரியர் சரண்யா ஆகியோர் விளக்கி கூறினார்கள்.

 மேலும் இவ்விழிப்புணர்வில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், நம் நாட்டின் முக்கிய தொழிலான வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்பைக் கொடுக்கும் தொழிலாக ஆயத்த ஆடை தொழிலே ஆகும் எனவும். படிக்கும் பருவத்திலே வளரிளம் பெண்கள் அதிக அளவில் பஞ்சாலைகளில் வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்,பெண் உரிமைகளை பாதுகாப்பது, பாலின பாகுபாட்டைக் களைப்பது போன்ற விழிப்புணர்வை ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன் பெண்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

மேலும் காரையூர் காவல்துறை சார்பில் பெண்கள் மத்தியில் பேசிய தலைமை காவலர் விமலாம்பாள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளுக்குரிய சட்டப் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம், POCSO சட்டம், உதவி எண்கள் 181, 1098  குறித்தும்   மற்றும் சைபர் கிரைம்(1930) குற்றங்கள் குறித்தும், பட்டியல் இனம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வையும் பெண்கள் மத்தியில் தலைமை காவலர் விமலாம்பாள் எடுத்துரைத்தார்.

மேலும் பெண்கள் மத்தியில் பேசிய காரையூர் காவல் நிலைய தலைமை காவலர் கலா பெண் குழந்தைகளின் சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது, குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 மற்றும் பள்ளி குழந்தைகள், பெண்களுக்கு ஏதேனும் சட்ட பிரச்சனை ஏற்பட்டால் பொன்னமராவதியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட ஆலோசனைமைய உதவி எண் 15100 ஐ அழைத்து சட்ட ஆலோசனை இலவசமாக பெறலாம் என தலைமை காவலர் கலா பெண்களிடையே விளக்கி கூறினார்.இந்நிகழ்வில் ரோஸ் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள்,டி.டி.எச் நிறுவனத்தின் பிடிசி திட்டப்பணியாளர்கள்,1098 தன்னார்வலர்,அங்கன்வாடி மேற்பார்வையாளர் பள்ளி மேலாண்மைக் குழுவினர், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இரா.பாஸ்கர்  செய்தியாளர்


Post a Comment

0 Comments