• Breaking News

    ரயிலில் பயணம் செய்ய பாஸ்போர்ட், விசா காட்டாயம்..... இந்தியாவில் இப்படியும் ஒரு ரயில் நிலையம்.....

     


    இந்தியாவில், ரயில் நிலையம் செல்ல பிளாட்பார்ம் டிக்கெட் போதும். ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் அது மாறுபடுகிறது. அட்டாரி ரயில் நிலையம் இந்தியா – பாகிஸ்தான் எல்லையின் அருகில் அமைந்துள்ளதால், இந்த ரயில் நிலையத்திற்கு செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயமாக தேவைப்படுகிறது.

    அட்டாரி ரயில் நிலையம் இந்தியாவின் கடைசி ரயில் நிலையமாக இருக்கிறது. இது இந்தியா – பாகிஸ்தான் ரயில்வே வழித்தடத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. 2019-ம் ஆண்டு வரை, இங்கிருந்து தினசரி ரயில்கள் பாகிஸ்தானின் லாகூர் நகரத்திற்கும் இயக்கப்பட்டதால், பயணிகள் பலரும் இங்கு வருவதற்காக பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் வந்தனர்.

    இப்போது, அட்டாரி ரயில் நிலையத்தில் மொத்தம் நான்கு ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன. அதில் முக்கியமானது சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்.  இது டெல்லி மற்றும் அட்டாரி இடையே வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. மற்ற இரண்டு பேசஞ்சர் ரயில்கள் அமிர்தசரசில் இருந்து வருகின்றன. ஜபல்பூரில் இருந்து ஒரு ஸ்பெஷல் ரயிலும் அட்டாரிக்கு இயக்கப்படுகிறது.அட்டாரி ரயில் நிலையத்தின் பாதுகாப்பு மிகவும் கடுமையானது. ராணுவத்தினர் சுற்றுப்புறங்களை பாதுகாக்கிறார்கள், மேலும் பயணிகள் பாஸ்போர்ட் மற்றும் விசா கொண்டு வருகிறார்களா என்பதை சரிபார்க்கிறார்கள். 

    இது பயணிகளுக்கு பாதுகாப்பான அனுபவம் தருவதற்கான முக்கிய காரணமாகும்.தீபாவளி போன்ற பெரும்பான்மையுள்ள விடுமுறைகளில், கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இதற்காக 40 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த விசேஷ ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மேலும் கட்டணங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்படுகின்றன.

    No comments