கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்
கும்மிடிப்பூண்டி வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கோளகாலமாக கொண்டாடப்பட்டது.கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார் தலைமையிலும், துணைத் தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், அமிழ்த மன்னன் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.நிகழ்வை ஒட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் , முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் .
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆயுத பூஜையை ஒட்டி இனிப்பு, பழங்கள், பொரி, பரிசுபொருள் ஆகியவற்றை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், துணை தலைவர் மாலதி குணசேகரன் வழங்கினர்.
இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரோஜா ரமேஷ் குமார், ஆரோக்கிய மேரி, ரவக்கிளி ஜெயராமன், வி.எம்.எஸ்.சீனிவாசன், மணிமேகலை கேசவன், இ.சீனிவாசன், சிவா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, சுபதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர்கள் ருத்ரமூர்த்தி, ரவி உள்ளிட்டோர், பங்கேற்றனர் .
No comments