திருப்பூர் மாவட்டத்தில் சித்தப்பழம் பிரிவு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.அவர் வட மாநில நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மளிகை கடையில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுகிறது என மர்ம நபர் ஒருவரால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் பெயரில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த சிவாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில்,சாக்லேட் விற்றதை உறுதி செய்தார். அதை தொடர்ந்து அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா சாக்லேடுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்த மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் போதை பொருள் பழக்கம் குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
0 Comments