பழனி முருகன் கோயிலின் ராஜகோபுரம் சேதம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் மலைக் கோயி ராஜகோபுரம் சேதமடைந்துள்ளது பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரசித்திப் பெற்ற பழனி மலை கோயிலுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள ஒரு பகுதி சேதமடைந்து இடிந்து விழுந்திருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குடமுழுக்கு நடைபெற்று 21 மாதங்களே ஆன நிலையில், ராஜகோபுரம் சேதமடைந்திருப்பது கவலையளிப்பதாக ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய கோயில் அதிகாரிகள், ராஜகோபுரத்தின் மேல் குரங்குகள் அதிகமாக இருப்பதால் கோபுரத்தில் உள்ள பதுமைகள் மற்றும் சிற்பங்கள் அடிக்கடி சேதமாவதாக தெரிவித்தனர். மேலும், சேதமடைந்த பகுதியை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
No comments