• Breaking News

    தீபாவளி பண்டிகை...... டெல்லியில் அபாய கட்டத்தை தாண்டிய காற்று மாசுபாடு.....


     தலைநகர் டெல்லியில் காற்றின் மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையிலும் முற்றிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 1 வரையில் பட்டாசுகள் தயாரிக்க மற்றும் வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது‌.

    இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. அதன்படி காற்று மாசுபாடு அளவு 331 என்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. குறிப்பாக டெல்லியில் உள்ள ஆனந்த் விகாரில் 441 ஆகவும், ஜகாங்கிரி பூரில் 401 ஆகவும் இருக்கிறது. 

    ஏற்கனவே டெல்லியில் நேற்று ‌8 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமானது. மேலும் தற்போது காற்றின் மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments