• Breaking News

    சென்னையிலிருந்து சபரிமலை வரை தனி ஒருவராக பாதயாத்திரை செல்லும் தீவிர ஐயப்ப பக்தர்


    சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே சுவாமி ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை முழுவதிலும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சரண கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஜாதி, மதம், மொழி, இனம் என்ற பாகுபாடில்லாமல் அனைத்துவிதமான பக்தர்களும் ஐயப்பனை தரிசிக்கவும், அவரது அருளாசிகளைப் பெறுவதற்கும் விரதம் மேற்கொண்டு, கடினமான மலைப் பாதையில் பயணம் செய்து மலை உச்சியில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை காண வருகின்றனர். 


    எவ்வளவு சொகுசாக சபரிமலைக்கு சென்றாலும், பம்பை வரை மட்டும் அப்படி செல்ல முடியும். பம்பையில் இருந்து சன்னிதானம் வரையிலான 7 கி.மீ., பாதயாத்திரையாக மட்டுமே செல்ல முடியும். ஆனால் ஒரு ஐயப்ப பக்தர் சென்னையிலிருந்து சபரிமலை வரை தனி ஒருவராக பாதயாத்திரை செல்வதாக நமது மக்கள் நேரம் செய்தி குழுவுக்கு தகவல் கிடைத்தது. இந்த யாத்திரை குறித்து மேலும் தகவலை பெற்ற போது நமக்கே புல்லரிக்க வைத்தது. சென்னை,பூந்தமல்லியை சேர்ந்த P.டில்லி குமார் என்ற தீவிர ஐயப்ப பக்தர் கடந்த 17.09.2024 அன்று சென்னீர்குப்பம்,வாணியர் தெருவில் மணி குருசாமி தலைமையில் இருமுடி கட்டி தனது 18 ஆம் ஆண்டு சபரிமலை யாத்திரையை பாதயாத்திரையாக சென்னையில் இருந்து சபரிமலை வரை தனி ஒருவராக நடந்தே செல்கிறார். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை  செல்வது மிகவும் கடினமானது. ஆனால் சென்னையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை நடந்தே தீவிர ஐயப்ப பகதர் செல்கிறார் என்பது அனைவரையும் மிகவும் ஆச்சர்யபட வைத்துள்ளது.

    No comments