துப்பாக்கியை வைத்து பூஜை செய்த ரவீந்திர ஜடேஜாவின் மனைவி
கடந்த 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜகவில் இணைந்தார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
இதனை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தனது மனைவிக்கு ஆதரவாக ரவிந்திர ஜடேஜா பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சமீபத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிந்திர ஜடேஜா அறிவித்தார். அவரும் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் விஜயதசமி பூஜை நடைபெற்ற போது ரிவாபா ஜடேஜா துப்பாக்கி வைத்து பூஜை செய்துள்ளார். ரிவாபா ஜடேஜா பயபக்தியோடு துப்பாக்கிக்கு மலர் வைத்து பூஜை செய்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
No comments