பொதுத்தேர்வு அட்டவனை வெளியாகும் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை 2024ம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவையில் இந்த அட்டவணையை வெளியிடுகிறார். 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மொத்தம் எப்போது நடைபெறும், எந்தெந்த பாடங்களில் தேர்வு நடக்கும் என மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம் 2024-25 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளுக்கான திட்டமிடல் மற்றும் தேர்வுக்கால அட்டவணை குறித்த பயிற்சிகளை மாணவர்கள் துவங்க முடியும். இவ்வாண்டில் அரசுத் தேர்வுகளின் தேதி அறிவிப்பு மாணவர்களின் பரீட்சை தயாரிப்பில் மிக முக்கிய பங்காக இருக்கும்.
No comments