ராமநாதபுரம்: மனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த கணவன்

 


ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் பகுதியில் ஏரக்காடு கிராமத்தில் வசிப்பவர் தர்மராஜ்(40). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்கிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மனைவி இருந்துள்ளார். தர்மராஜ்-தனலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே தர்மராஜ் தனது மனைவியிடம் சண்டை போட்டு பிரிந்து இருந்துள்ளார். இதற்கிடையில் தனலட்சுமி,தர்மராஜ் உடன் விவாகரத்து கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் தர்மராஜ், தனலட்சுமி உடன் சண்டை போட்டுள்ளார்.

இந்த சண்டை கைகலப்பாக மாறி சுத்தியலால் தர்மராஜ் தனலட்சுமியை  சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தனலட்சுமியை தூக்கிச் சென்று வீட்டிற்கு வெளிப்புறம் உள்ள வேலிக்கல்லால் அடித்து கொலை செய்து வீட்டின் அருகிலேயே குழியை தோண்டி புதைத்துள்ளார். தனலட்சுமியின் அண்ணன் முனியாண்டி தர்மராஜ் தனது தங்கையிடம் சண்டை போட்டுள்ள விவகாரம் தெரிந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் தர்மராஜை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் தர்மராஜ் கூறியதாவது, தனக்கும், தனது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டையில் தனலட்சுமியை அடித்து கொலை செய்து வீட்டின் அருகிலேயே புதைத்து விட்டதாக ஒப்புக்கொண்டார். இதனால் புதைக்கப்பட்ட தனலட்சுமி உடலை வட்டாட்சியர் செல்லப்பா மற்றும் கிராம அலுவலர் ரோட்ரிகோ முன்னிலையில் காவல்துறையினர் தோண்டி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

Post a Comment

0 Comments