மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் இணைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் - கே.பி.முனுசாமி
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாவட்டம் முழுவதும் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் நான்கு ஆண்டுகால ஆட்சியை ஒப்பிட்டு பேசியவர், வாக்கு வங்கிக்காக மட்டும் அரசு பணத்தை பயன்படுத்தும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என குற்றம் சாட்டினார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால், மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
No comments