தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நடிகர் தாடி பாலாஜி
நடிகர் தாடி பாலாஜி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்துள்ளார். விஜய் அவரை நேரடியாக அழைத்து, கட்சியின் பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.விஜய்க்கு நேரில் பூஜை செய்த பிறகு, தாடி பாலாஜி செய்தியாளர்களுக்கு, “27-ம் தேதிக்கு பிறகு விஜய் யார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னால் கட்சிக்காக அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்வேன் என உறுதியளித்துள்ளார்.இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக கட்சியில் தாடி பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இனி களத்தில் இறங்கி பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
மேலும் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகு தாடி பாலாஜி கட்சியில் இணைந்துள்ள நிலையில் இன்னும் சில நடிகர் நடிகைகள் கூட கட்சியில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
No comments