பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரயில் விபத்து காயம் அடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார் அமைச்சர் ஆவடி சா.மு நாசர்
பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து காயம்பட்டவர்களை பொன்னேரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை அமைச்சர் ஆவடி நாசர் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர்.
முன்னதாக விபத்து நடந்த இடத்தில் கவரப்பேட்டையில் அமைச்சர் சா.மு நாசர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உடன்.ஒன்றிய செயலாளர் கே. வி ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்து பின்னர் பொன்னேரி மருத்துவமனைக்கு சென்றார்.
அவருடன் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மீஞ்சூர் முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ் காங்கிரஸ் வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் திமுக கழக நிர்வாகிகள்.உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
No comments