நாகை: மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 2 நாட்கள் அடிப்படை பயிற்சி திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் நடைப்பெற்றது.இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி வட்டார இயக்க மேலாளர் அறிவு நிதி ஒருங்கிணைப்பாளர் சுபாஸ்ரீ கலந்து கொண்டு பயிற்சி பற்றிய கருத்துக்கள் வழங்கப்பட்டது. இதில் வட்டார வள பயிற்றுநர் திருமதி கார்த்திகா பயிற்சி அளித்தார்.
சுய உதவி குழு நோக்கம், குழுவின் வரலாறு, குழுவின் கோட்பாடு,பஞ்ச சூத்திரம், ஊக்குநர் மற்றும் பிரதிநிதி பொறுப்புக்கள்,குழு கூட்டம், உறுப்பினர் பங்கேற்பு ,சேமிப்பு மற்றும் சந்தா வசூல் ,சேமிப்பு இடைவெளி, உள் கடன் வழங்குதல், வெளிக்கடன் வழங்குதல், பதிவேடுகள் பராமரிப்பு, கடன் சுழற்சி,சேமிப்பு அதிகரித்தல், உறுப்பினர்களுக்கு வங்கி கணக்கு துவங்குதல், காப்பீடு,உரிமைச் சார்ந்த திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள்,சேவை திட்டங்கள்,சமூக மேம்பாடு செய்தல், குழுக்களின் சிறந்த சாதனைகள், தணிக்கை விவரம், நிதி உள்ளாக்கம் பண்ணச் சார்ந்த தொழில்கள், பண்ணை சாரத் தொழில்கள், வங்கி வட்டி மானியம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
மக்கள் நேரம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர்
ஜி.சக்கரவர்த்தி
.விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments