• Breaking News

    கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா


      கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கும்மிடிப்பூண்டி ஊரக மற்றும் நகர் பிரிவு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி ஊரகம் மற்றும் நகர் பிரிவு உதவி மின் பொறியாளர் எம்.சி.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆயுத பூஜை விழாவில் இளநிலை உதவி பொறியாளர் டி.பிரபாகரன், ஆர்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஊரக மற்றும் நகர்ப்புற உதவி மின் பொறியாளர் அலுவலகத்திலும், அலுவலகத்தில் உள்ள மின் உபகரணங்களிலும்  ஆயுத பூஜை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    No comments