திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தவர்கள் பால்ராஜ்-வசந்தா. இவர்களுக்கு பரிமளா(31)என்ற ஒரு மகள் உள்ளார். பரிமளா தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பரிமளா உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் பேருந்தில் தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருக்கும்போது பேருந்தில் புதுக்கோட்டை மாவட்ட மச்சுவாடி வ. உ.சி நகரில் உள்ள சதீஷ்குமார் என்பவர் உடன் பழகியுள்ளார். இதைத்தொடர்ந்து பரிமளா,சதீஷ்குமார் இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டுகளாக லிவ்விங் டுகெதர் முறையில் இருந்துள்ளனர்.
இதன் பின்னர் சதீஷ்குமார் சவுதி அரேபியாவில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுள்ளார். வெளிநாட்டிற்கு சென்ற சதீஷ்குமார் 2022-ல் சொந்த ஊர் திரும்பினார். பின்னர் சதீஷ்குமார், பரிமளாவிற்கு குடும்பத்தாரின் சம்மதத்துடன் புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து இருவரும் திருப்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமாரின் குடும்பத்தார்கள் அவரை சொந்த ஊருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஊருக்கு சென்ற பின் சதீஷ்குமார், பரிமளா உடன் சேர்ந்து வாழ்வதை தவிர்த்து உள்ளார்.
பரிமளா உடன் தொலைபேசியிலும் தொடர்பு கொள்வதில்லை.இதனால் பலமுறை பரிமளா சதீஷ்குமாரை சந்திக்க முயன்றுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான பரிமளா நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சதீஷ் குமாரின் வீட்டின் முன்பு தனது கணவனை அவரது குடும்பத்தார்கள் என்னிடமிருந்து பிரித்து விட்டனர். திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளில் நான்கு முறை கருக்கலைப்பு செய்துள்ளார்.சதீஷ்குமாரின் குடும்பத்தினருடன் இருந்து அவரை பிரித்து தருமாறு, கையில் ஒரு பெரிய போர்டில் குற்றச்சாட்டுகளை எழுதிய வாசகத்தை ஏந்தியவாறு வீட்டின் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சதீஷ்குமாரின் குடும்பத்தினரை விசாரித்தனர். சதீஷ்குமாரின் குடும்பத்தினர் பரிமளா கூறுவது பொய்யானது. தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் பரிமளாவை, சதீஷ்குமார் பிரிந்துள்ளார் என கூறினர்.காவல்துறையினர் பரிமளாவை சமாதானப்படுத்தி இது குறித்து நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. கணவனை மீட்டு தரக்கோரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
0 Comments