செங்கல்பட்டு: ஆறுபடை பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நடைப்பெற்றது


ஆறுபடை பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி திருப்போரூர் ஆறுபடை வீடு மெட்ரிக் மேல்நிலைபள்ளி வளாகத்தில் நடைபெற்றது.ஆறுபடை பள்ளி தாளாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.

சிறப்பு  விருந்தினராக திருப்போரூர்  பேரூராட்சி தலைவர் தேவராஜ், மாவட்ட  உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்செல்வன், வார்டு கவுன்சிலர்கள் மேகலாதேவி, லட்சுமி  குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் போட்டிகள் 11, 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடந்தது. மாட்ட அளவில் உள்ள பள்ளிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகினர்.

இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளை திருப்போரூர் ஆறுபடை வீடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்  செய்திருந்தது.இதில், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நெம்மேலி பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன்,   உடற்கல்வி ஆசிரியர்கள் லிவிங்ஸ்டன், துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் 4வது வகுப்பு படிக்கும் மாணவன் க.ஷரன் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.பின்னர் தமிழ்நாடு  அளவிலான செஸ் போட்டியில் தாம்பரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவன் ஷரான் தேர்வு செய்துள்ளார் இதனால் பள்ளி சார்பில் மற்றும்  பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்

Post a Comment

0 Comments