அரசு பேருந்து டிரைவர் மடியில் அமர்ந்து 'குடிமகன்' அட்டகாசம்

 


கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ், 21ம் தேதி இரவு வந்து கொண்டிருந்தது. பஸ்சை, கோவையைச் சேர்ந்த ரகுராம், 39, என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனி அருகே பஸ் வந்த போது, குறுக்கு ரோட்டில் இருந்து, இருவர் டூ - வீலரில் அதிவேகமாக வந்து திரும்பினர்.

 பஸ் டிரைவர் 'ஹாரன்' அடித்து, எச்சரிக்கை செய்தார்.போதையில் டூ - வீலரில் வந்த இருவரும், பஸ்சை பின்தொடர்ந்தனர். காந்தி நகர் சிக்னல் அருகே பஸ்சை வழிமறித்து, பஸ்சில் ஏறிய ஒரு போதை ஆசாமி, டிரைவரின் மடியில் சென்று அமர்ந்து கொண்டு, 'உனக்கு பஸ் ஓட்டத் தெரியலே. நான் சொல்லிக் கொடுக்கிறேன்' என அலப்பறை செய்து பணி செய்ய விடாமல் தடுத்து, தகராறு செய்தார்.

அனுப்பர்பாளையம் போலீசார், இருவரையும் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். விசாரணையில், டிரைவரிடம் அட்டகாசம் செய்த சோளிபாளையத்தை சேர்ந்த பிரதீப், 48, நண்பருடன் டூ - வீலரில் வந்த போது, அரசு பஸ் மோதுவது போல வந்ததாகவும், இதுதொடர்பாக டிரைவரிடம் முறையிட பஸ்சில் ஏறியதாகவும் கூறினார்.பிரதீப்பை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Post a Comment

0 Comments