மாணவர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர்..... கவர்னரிடம் மனு கொடுத்த மாணவர்


 கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பட்டம் வாங்கிய வந்த ஆராய்ச்சி மாணவரான பிரகாஷ் என்பவர் கவர்னரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அதனை கவர்னர் வாங்கிக் கொண்டார்.

 இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அந்த மாணவர் அளித்த பேட்டியில் கூறியதாவது எனது பெயர் பிரகாஷ். விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கிறேன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஆராய்ச்சியாளர் பட்டம் பெற்றேன். இங்கு பலர் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இரண்டு விடுதிகள் நடத்தப்படுகிறது. ஆனால் நிதிகள் ஒதுக்கப்பட்டும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. மழை பெய்தால் கழிவறை ஒழுகுகிறது. மாணவர்களுக்கு எந்த சலுகையும் இல்லை.விளையாட்டு மைதானத்தில் சில துறை மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் பணம் வாங்கிக் கொண்டு விளையாட அனுமதிக்கிறார்கள்.

 வைவாவில் வெற்றி பெற வேண்டும் என்றால் கூறுவதை செய்ய வேண்டும் என சொல்கின்றனர். அது மட்டும் இல்லாமல் சில பயிற்சியாளர்கள் ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். எனக்கு இதனால் பிரச்சனை இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆராய்ச்சி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என மனு கொடுத்ததாக அந்த மாணவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments