தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆரோக்கிய தாஸ் மனைவி வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் தேவி வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது ஆரோக்கியதாஸ் அரிவாளால் வெட்டி தேவியை கொலை செய்தார். மேலும் தேவியின் உடலை சாலையில் இழுத்துச் சென்றபோது அந்த பகுதி மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோபத்தில் ஆரோக்கிய தாசை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஆரோக்கியதாசுக்கும் தேவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஆரோக்கியதா தேவிக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இரண்டு மாதங்களாக அந்த பணத்தை கேட்டும் தேவி பணத்தை தராமல் காலம் தாழ்த்தியுள்ளார். அது மட்டும் இல்லாமல் என்னுடன் தொடர்பில் இருப்பதை உன் மனைவியிடம் கூறி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் கோபத்தில் தேவியை கொலை செய்ததாக ஆரோக்கியதாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
0 Comments