• Breaking News

    அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

     


    அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அவர் இன்று விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட அலுவலகத்தின் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் தன் ஆதரவாளர்களுடன் ஈடுபட்டார். 

    அதாவது போலீசாரிடம் கொடுக்கப்படும் புகார்கள் மீது அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து விழுப்புரம் மாவட்ட பெருந்திட்டம் வளாகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினார்.அதாவது இதுவரை காவல்துறையினரிடம் 21 புகார்கள் கொடுக்கப்பட்ட போதிலும் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

     அவரிடம் காவல்துறையினர் சமாதானமாக பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அவர் உடன்படவில்லை. அவர் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினார். மேலும் இதன் காரணமாக தற்போது சி.வி சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    No comments