சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கடனை சரியாக செலுத்த இயலவில்லை. இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி மேரியின் வீட்டிற்கு வந்து சென்றனர்.
அவர்கள் பணம் கேட்டு மேரியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தவணைத் தொகையை கட்ட மேரி கால அவகாசம் கேட்டார். இதனால் கோபமடைந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மேரி வீட்டில் இருந்த பியூஸ் கேரியரை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு இடையே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
0 Comments