நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசாமல், திமுக கவுன்சிலர் வீடியோ காலில் வேறொரு நபருடன் உரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் தொடங்கியும், கவுன்சிலர்கள் வராததால், இருக்கைகள் சுமார் அரை மணி நேரம் காலியாகவே இருந்தன. இதையடுத்து, மாமன்ற கூட்டத்தற்கு கால தாமதமாக வந்த கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு குறைகளையும், கோரிக்கைகளையும் மேயரிடம் முன்வைத்தனர்.
அப்போது, 20வது வார்டு திமுக கவுன்சிலர் ஷேக்கு மன்சூர், செல்போனில் யாரோ ஒருவரிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். மாமன்ற கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசாமல், திமுக கவுன்சிலர் அலட்சியமாக செயல்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
0 Comments