• Breaking News

    காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்...? செல்வபெருந்தகை அதிரடி

     


    காங்கிரஸ் கட்சியில் தற்போது நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்படுவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகளை செல்வபெருந்தகை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கட்சியில் 5 வருடங்களுக்கு மேல் பதவியில் இருப்பவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோர் ஆகியோர் விவரங்களை செல்வபெருந்தகை சேகரித்து வருகிறாராம்.

    அந்த லிஸ்டின் அடிப்படையில் கட்சி பணிகளை சரிவர கவனிக்காத நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை மாற்ற அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக  சென்னையில் அனைத்து மாவட்ட தலைவர்களின் பதவியையும் பறிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்வப் பெருந்தகையின் இந்த புதிய முடிவு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    No comments