மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தங்க விமானங்களுக்கு நாளை பாலாலயம்

 


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு நாளை பாலாலயம் செய்யப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு 5 கோபுரங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கோயிலில் உள்ள தங்க விமானங்கள், கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கு நாளை காலை பாலாலயம் செய்யப்பட உள்ளது.

அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு விக்னேச்வர பூஜை, புண்யாஹ-வாசனம், நான்காம் கால யாக பூஜை  நடத்தப்படும் எனவும் இந்த பாலாலய நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் பங்கேற்குமாறும் கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments