தீபாவளி பண்டிகை...... சிவகாசியில் களைகட்டும் பட்டாசு விற்பனை

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களையும் கவரும் விதமாக ஏராளமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லாலிபாப், பாப்கான், ஐ கோன் போன்ற புதுரக பட்டாசுகளை வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்வதாக கூறும் விற்பனையாளர்கள், கடந்த வருடத்தை விட இந்த வருடம் பட்டாசுகளின் விலை சற்று உயர்ந்துள்ளதாகக் கூறினார்.

ஆன்லைன் பட்டாசு விற்பனையை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளியையொட்டி பொதுமக்கள் பட்டசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் 90 சதவீத தள்ளுபடி விற்பனையில் பட்டாசுகள் கிடைப்பதாக ஆன்லைனின் போலி விளம்பரம் செய்யப்படுவதை மக்கள் நம்ப வேண்டாம் என பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு பட்டாசுகள் சென்று சேர்வதில்லை என குற்றச்சாட்டுகள் எழுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் இதுதொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பட்டாசு விற்பனையாளர்கள், இந்த மோசடிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments