சத்தியமங்கலம்: அரசு மாதிரி பள்ளியில் சத்துணவு கூடம் கட்ட ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , கொமராபாளையம் ஊராட்சியில் அரசு மாதிரி பள்ளியில் 8,40,000 ருபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சத்துணவு கூடம் அமைக்க சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் , சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி கொமார பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் .எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. உடன் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், தலைமை ஆசிரியர் ராதிகா , மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் மாணிக்கம் , நடராஜ் தர்மராஜ் , மாவட்ட பிரதிநிதி ரமேஷ் , உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத்குமார் , சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அசோகன் , இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் ஆசிரியர் ஜெயக்குமார் , ஆசிரியர் பெருமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments