• Breaking News

    நம்பியூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முதல்வர் சிறப்பு திட்டத்தில் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலுக்கு சாலை வசதி வேண்டி ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தர்மகர்த்தா லோகநாதன் மனு


    ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில்   குளத்துக்கரை பகுதியில் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

    இந்த திருத்தளத்தில் சிறப்பம்சமான எலுமிச்சை பழத்தில் வரம் கேட்கும் நிகழ்வு வெள்ளி செவ்வாய்க்கிழமை அமாவாசை தினங்களில் நடைபெற்று வருகிறது.மேலும் நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும்  எலத்தூர் பெரியபாளையம் நல்லாத்துப்பாளையம்   பனையம்பள்ளி சத்தியமங்கலம்  கொடிவேரி உக்கரம் சிங்கிரிபாளையம் கோபி ஈரோடு குன்னத்தூர்  திருப்பூர் அவிநாசி கோவில்பாளையம் கோவை பழனி மதுரை சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊரைச் சார்ந்த மக்கள் குலம் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது மேலும் ஐய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியை குளத்துக்கரைக்கு செல்லும் முக்கிய பாதையாக திகழ்ந்து வருகிறது மேலும் இதன் பகுதியில் பஞ்சாயத்து குடிநீர் கிணறு மற்றும் செட்டியம்பதி பொதுமக்கள் செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது மக்கள் பயன்பாட்டிற்காக தார் சாலை அமைத்து குளத்து அருகில் மெர்குரி லைட் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைத்து தருமாறு உங்களைத் தேடி உங்கள் ஊரில் முதல்வர் திட்டத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவில் தர்மகர்த்தா லோகு அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜா கோபால் சுன்கரா அவர்களிடம் மனு அளித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments