மயிலாடுதுறை நுகர்பொருள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை நுகர்பொருள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையானது மாவட்டத்தின் முதன்மை கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பட்டாசு விற்பனையை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை , குத்தாலம் செம்பனார்கோயில் சீர்காழி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த கூட்டுறவு பண்டக சாலையின் மூலம் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த கூட்டுறவு பண்டகசாலையில் மூலம் 140 லட்சத்திற்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போதைய ஆண்டில் 150 லட்சத்திற்கு பட்டாசு விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுகளை வழங்கி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
No comments