கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


 கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக கன்னியாகுமரியில் பெய்த மழை காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 4 நாட்களுக்கு பின் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஞாயிறு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Post a Comment

0 Comments