• Breaking News

    சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைக்க கூடாது என்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் தலைமையில் திமுக மாவட்ட பிரதிநிதி ரமேஷ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற துணை தலைவர், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

    இந்த போராட்டத்தில்  கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து  பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், வணிகர்கள்,  விவசாயிகள் பெருந்திரளாக சுமார் 2000க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி, தரையில் அமர்ந்து தர்ணா செய்துபோராட்டம் நடத்தினர்,வருவாய் வட்டாட்சியர் திரு சக்திவேல், அவர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர் திரு செல்வராஜ்,அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொமாரபாளையம் ஊராட்சி தொடர்ந்து ஊராட்சியாக செயல்பட ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில், பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments