பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் அறிமுக கூட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானி சாகர் சட்ட மன்ற தொகுதி பார்வையாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில், பவானி சாகர் சட்ட மன்ற தொகுதி பார்வையாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி முன்னிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் (சத்தியமங்கலம்) நடைபெற்றது.
இந்த அறிமுக கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், பொது குழு உறுப்பினர் கா.கி.ராஜேந்திரன், சத்தியமங்கலம் திமுக நகர செயலாளரும் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ, சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், தாளவாடி ஒன்றிய செயலாளர் டி.சிவண்ணா , புஞ்சை புளியம்பட்டி நகர செயலாளரும் , புஞ்சை புளியம்பட்டி நகராட்சி துணை தலைவர் பி.ஏ.சிதம்பரம், கெம்பநாயக்கன்பாளையம் திமுக பேரூர் செயலாளரும், கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் கே.ரவிசந்திரன், அரியப்பம்பாளையம் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ். செந்தில்குமார், பவானிசாகர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், மாதம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வி.என்.காளியப்பன் , பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பவானிசாகர் பேரூர் செயலாளரும் , பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன்குமார் மற்றும் மாநில , மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments