சுவாமிமலை கோயில் வெளியே உறங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டிய பணியாளர்கள்

 


சுவாமிமலை திருக்கோயில் வெளியே படுத்து உறங்கிக்கொண்டிருந்த வெளியூர் பக்தர்களை, கோயில் பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி விரட்டிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கார்த்திகை தினத்தை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு கோயில் முன்பு படுத்து உறங்கியுள்ளனர்.

மறுநாள் அங்கு வந்த கோயில் பணியாளர்கள் உறங்கிக்கொண்டிருந்த பக்தர்களை விரட்ட, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றியது முருக பக்தர்களிடையே வேதனை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இச்செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments