ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு 2017-ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இளம் பெண்ணின் கணவருக்கு கோவையில் வேலை கிடைத்தது. இதனால் 2023-ஆம் ஆண்டு குடும்பத்துடன் கோவைக்கு வந்துவிட்டனர். இளம்பெண்ணுக்கு தனுடன் பள்ளியில் படித்த பாசித் அகமது என்பவர் அறிமுகம் ஆகி நட்பாக பழகினார். இது குறித்து அந்தப் பெண் தனது கணவரிடமும் கூறிவிட்டார்.செப்டம்பர் 4ம் தேதி, பாசித் அகமத், பெண்ணையும், அவரது குழந்தைகளையும் அவரது கணவரின் அனுமதியுடன் வெளியில் அழைத்துச் சென்றார்.
கோவையின் காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவர்களை அழைத்து, ஜூஸ் கொடுத்தார். ஜூஸ் குடித்ததும், பெண் மயக்கமடைந்து விட்டார். இதையடுத்து, பாசித் அகமத் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அந்த கொடுமையை வீடியோவாகவும் பதிவு செய்தார்.அதன்பிறகு, வீடியோவை பயன்படுத்தி மிரட்டிய பாசித், தொடர்ந்து அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நெருக்கடி ஏற்படுத்தினார். தன்னால் இதை சகிக்க முடியாத அளவுக்கு சென்றபோது, அந்த பெண் தனது கொடுமையை மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் பாசித் அகமதுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments