• Breaking News

    தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அவசர கடிதம்

     


    தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

     தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு தயார் நிலையில் வைத்துள்ளதோடு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனை முன்னிட்டு தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தற்போது கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரக்கிளைகள் உடைந்து விழுதல், போக்குவரத்துக்கு இடையூறு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். 

    அதாவது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளை குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில்  சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    No comments