• Breaking News

    நாகை: ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்



     தாராபுரம் உதவிக்கோட்ட பொறியாளர் கணேசமூர்த்தி தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்கை கையாள்வதையும், ஜாதிய வன்மத்துடன் தீண்டாமையை கடைபிடிப்பதையும் கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 5-வது நாளாக நடந்துவரும் போராட்டத்திற்கு ஆதரவாக, நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

    மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி மற்றும் மாவட்டத் தலைவர் எஸ்.கணேசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் சிறப்புரையாற்றினார். 30 சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கீழ்வேளூர் வட்டப் பொருளாளர் தாமோதரன் நன்றியுரையாற்றினார்.என்பது குறிப்பிடதக்கது.

    மக்கள் நேரம் எடிட்டர் & நாகை மாவட்டம் 

    நிருபர் ஜீ. சக்கரவர்த்தி

    No comments