முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் நினைவஞ்சலியை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவான கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டு திமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி திமுக கவுன்சிலரும், திமுக ஒன்றிய பிரதிநிதியுமான கருணாகரன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலாளர் அறிவழகன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துணைத்தலைவர் கேசவன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழணி அமைப்பாளர் பாஸ்கரன், கும்மிடிப்பூண்டி நகர திமுக நிர்வாகிகள் இரா. ரமேஷ், பேரூராட்சி திமுக கவுன்சிலர் இஸ்மாயில், குப்பன், திமுக நிர்வாகி முனிராஜ், கும்மிடிப்பூண்டி ஒன்றிய திமுக கவுன்சிலர் ஜெயச்சந்திரன், முன்னிலை வகித்தனர்.இதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து 300 பேருக்கு பேரூராட்சி திமுக கவுன்சிலர் கருணாகரன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 750 பேருக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் ஆறுமுகம் செட்டியார், மாவட்ட நிர்வாகி அறிவழகன், ஒன்றிய பிரதிநிதி கே.ராஜா, நகர நிர்வாகிகள் கிருஷ்ணன், முனியாண்டி, சாண்டில்யன், குட்டி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
No comments