நாகை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவு தின கூட்டத்தில் ஊராட்சி தலைவர் "கோமதி தமிழ்ச்செல்வம்" தடம் பதித்த பணிகள் குறித்த நூல் வெளியீடப்பட்டது
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சோழ வித்தியாபுரத்தில் மாவீரன் பகத்சிங் மற்றும் பி. சீனிவாச ராவ் ஆகியோரது நினைவு பொதுக்கூட்டம் இரவு நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு கிளை தலைவர் மு. பத்மநாதன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஏ.வி.எம். பகத்சிங் வரவேற்றார்.
இந்நிகழ்வில் இரா. சிவனேசன்,எம்.கே. தங்கமணி, கோமதி தமிழ்செல்வம்,கே. கார்த்திகேயன், ஏ.டி. சுதாகர்,ஆர்.எம். ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா பங்கேற்று "அடிமை விலங்கொடித்த வீரர்-தோழர் பி சீனிவாச ராவ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாவட்டத் துணைச் செயலாளர் சீ.ப்பி. செல்வம் மாவீரன் பகத்சிங் வாழ்வு மரணமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து புதுகை பூபாலம் கலைக்குழுவினர் நாட்டு நடப்புடன் கூடிய அரசியல் நையாண்டி நிகழ்வை அரங்கேற்றிய நிலையில் அதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முன்னதாக சோழ வித்யாபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கோமதி தமிழ்செல்வம் தடம் பதித்த பணிகள் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலில் ஊராட்சிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் வரவு செலவு விவரங்கள் உள்ளிட்டவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று தற்போது வரை ஊராட்சியில் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தவிலிசையோடு கவிச்சாரங்கள் மற்றும் மண் மணக்கும் பாடல்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதியாக ச. தமிழ்ச்செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை மூ. சுதாகர் தொகுத்து வழங்கினார்.இதில் கவிஞர்கள் ஆ.மீ. ஜவகர் செந்தூர் குமரன், கேப்டன் ராஜ், கனல்விழி கிராம மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments